search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயின் பிராவோ"

    கேப்டன் பதவியில் டோனி 50-வது வெற்றியை பெற்ற போட்டியில் பிராவோ சிக்ஸ் அடித்தும், 100-வது வெற்றியை பெற்ற போட்டியில் சான்ட்னெர் சிக்ஸ் அடித்தும் அசத்தியுள்ளனர். #IPL2019 #MSDhoni
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்தது. எம்எஸ் டோனிக்கு கேப்டனாக இது 100-வது வெற்றியாகும்.

    எம்எஸ் டோனிக்கு சாதனையான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்துள்ளது. கடந்த 2012 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.



    கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ராஜட் பாட்டியா பந்து வீச வெயின் பிராவோ கடைசி பந்தை சந்தித்தார். லோ புல்டாஸ்-ஆக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கி வெயின் பிராவோ வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி ஐபிஎல் தொடரில் டோனிக்கு கேப்டனாக 50-வது வெற்றியாகும்.

    அதேபோல் நேற்று சான்ட்னெர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி டோனிக்கு கேப்டனாக 100-வது வெற்றியாகும். இதன்மூலம் டோனி முக்கியமான சாதனை வெற்றிகளை ருசித்த போட்டிகளில் சென்னை அணிக்கு கடைசி பந்தில் சிக்ஸ் மூலமே வெற்றி கிடைத்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ-வை மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும். 2018-19 சீசன் விரைவில் தொடங்குகிறது.

    பிக் பாஷ் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடினார்.



    இந்நிலையில் இந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கெய்ல் தலைமையிலான அணியை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvIND
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
    தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றோம், இந்த வெற்றியை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பானது. இது ஒரு சிறப்பான சூழ்நிலை. நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து விளையாடியது கிடையாது.



    ஒரு போட்டிக்குப் பின்னர் நாங்கள் சென்னையில் இருந்து புனேவிற்குச் சென்றோம். பெரும்பாலான வீரர்களுக்கு இது முதல்முறை. நாங்கள் போட்டியின்மீது கவனம் செலுத்தி, அதை செய்தோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை விட சிறந்தது ஏதும் இல்லை’’ என்றார்.
    ×